LATEST NEWS
BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் வேனும் -காரும் மோதி பயங்கர விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், அவர்களுடன் காரில் பயணித்த உதயசங்கர் என்பவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்தின் போது வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த உடனே அங்கு வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
