LATEST NEWS
அய்யோ பாவம்.. 15 வயது சிறுமியை மோதிவிட்டுப் பறந்த பைக்.. ரோடு கடக்க முயன்றபோது நேர்ந்து கொடூரம்.. வெளியான பகீர் சிசிடிவி வீடியோ..!!
மும்பை ஜூஹு பகுதியில் உள்ள என்.எஸ். சாலை எண் 1-ல், மிதிபாய் கல்லூரி அருகே ரோடு கடக்க முயன்ற 15 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கொடூரச் சம்பவம் உள்ளூர் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அதிகம் உள்ள இப்பகுதியில், வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்க எவ்வித வேகத்தடைகளும் இல்லாததே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
https://twitter.com/AndheriLOCA/status/2090999878327713929/video/1
இதற்கு முன்னதாக இந்தச் சாலையில் வேகத்தடைகள் இருந்த நிலையில், மும்பை மெட்ரோ 2B திட்டப் பணிகளுக்காக ஜே.குமார் உள்கட்டமைப்பு நிறுவனம் அவற்றை தற்காலிகமாக அகற்றியுள்ளது. ஆனால், பணிகள் முடிவடைந்த பின்னரும் அந்த வேகத்தடைகளை மீண்டும் அமைக்காமல் அப்படியே அலட்சியமாக விட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்னும் பெரிய அசம்பாவிதங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்படுவதற்குள், இந்த முக்கியச் சாலையில் உடனடியாக தகுந்த வேகத்தடைகளை மீண்டும் அமைத்துத் தர வேண்டும் என ஜூஹு பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
