CRIME
அடக்கடவுளே..! மது போதையில் கேட்ட ‘அந்த’ ஒரு விஷயம்.. மனைவி மறுத்ததால் நேர்ந்த கொடூரம்.. போதை தெளிந்ததும் கணவன் விபரீத முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹரியானா மாநிலம் பல்வல் பகுதியில் உள்ள ராஜ்புரா கிராமத்தில், கடுமையான மது போதையில் இருந்த சோஹில் என்ற வாலிபர் தனது மனைவி ஷகுஃப்தா (25) மற்றும் ஒன்றரை மாதமே ஆன தங்களது ஆண் குழந்தை ஜுஹான் ஆகிய இருவரையும் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு சோஹில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சோஹிலுடன் உடலுறவு கொள்ள அவரது மனைவி ஷகுஃப்தா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சோஹில் தனது மனைவியின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அருகில் படுத்திருந்த தங்களின் ஒன்றரை மாதக் குழந்தை ஜுஹான் தாயைக் காணாமல் சத்தமாக அழத் தொடங்கியுள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த சோஹில், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கழுத்தையும் கொடூரமாக நெரித்துக் கொலை செய்துள்ளார். விடிந்ததும் மது போதை தெளிந்த நிலையில், தான் செய்த கொடூரச் செயலை உணர்ந்து சோஹில் கடுமையான மனவேதனையும், குற்ற உணர்ச்சியும் அடைந்துள்ளார். இந்தத் தீவிரப் பச்சாதாபத்தின் காரணமாக, வீட்டின் மூன்றாவது மாடித் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் தற்போது போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வரதட்சணைக் கொடுமை உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் சோஹிலின் குடும்பத்தினர் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
