“அடடே.. என்ன ஒரு பாசம்..!” சேம்பர் திறக்கும் முன்னே வெயிட்டிங்.. வழக்கறிஞர் வந்ததும் பாக்கெட்டில் கை வைக்கும் ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா..? வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடடே.. என்ன ஒரு பாசம்..!” சேம்பர் திறக்கும் முன்னே வெயிட்டிங்.. வழக்கறிஞர் வந்ததும் பாக்கெட்டில் கை வைக்கும் ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா..? வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக் கறிஞருக்கும் ஒரு குரங்குக்கும் இடையே நிலவும் அரிய நட்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கறிஞர் மகேஷ் யாதவின் சேம்பருக்கு தினமும் ஒரு குரங்கு வந்து, அவரது பாக்கெட்டிலிருந்து ரொட்டியை எடுத்துக்கொண்டு செல்கிறது. காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில் தினமும் காலையில் வழக்கறிஞர் சேம்பருக்கு வருவதற்கு முன்பே இந்த குரங்கு அங்கு வந்து வெளியே காத்திருக்கிறது. சேம்பர் திறக்கப்பட்டவுடன் ஓடிவந்து அவரது மேஜை மீது அமர்ந்து, வழக்கறிஞரின் பாக்கெட்டிலிருந்து ரொட்டியை எடுத்துச் செல்கிறது. இது ஏதோ ஒரு நாள் நடக்கும் நிகழ்வு அல்ல; கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கறிஞரும் குரங்கைக் கண்டதும் கைகளைக் கூப்பி ‘ஜெய் ஹனுமான்’ எனக் கூறி வணங்குகிறார்.

முன்னாள் உதவி மாவட்ட அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய மகேஷ் யாதவ், காசியாபாத் நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குரங்குடன் தனக்கு நட்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலிருந்து தினமும் அவர் சேம்பருக்கு வரும் முன்பே குரங்கு அங்கு வந்து காத்திருக்கும். கதவு திறந்ததும் உள்ளே வந்து மேஜை மீது அமர்ந்து, மிகவும் அமைதியாக அவரது பாக்கெட்டிலிருந்து ரொட்டியை எடுத்துக்கொண்டு அமைதியாகச் சென்றுவிடும். குரங்குக்காகவே வழக்கறிஞர் மகேஷ் யாதவ் தினமும் தனது பாக்கெட்டில் ரொட்டியை எடுத்துவரத் தவறுவதில்லை.

Advertisement

சில காரணங்களால் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வர முடியாத நாட்களில், அந்த குரங்கு நாள் முழுவதும் அவரது சேம்பரைச் சுற்றியே சுற்றித் திரிகிறது. அதன் இந்த நடவடிக்கையைப் பார்க்கும் சுற்றியுள்ள மக்களும், குரங்கு வழக்கறிஞருக்காகத்தான் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கின்றனர். மறுநாள் வழக்கறிஞர் சேம்பருக்கு வந்தவுடன், குரங்கு அவரிடம் வந்து அமர்கிறது. அவரும் குரங்கின் தலையைத் தடவிக் கொடுத்து, சில நேரங்களில் தன் கையாலேயே ரொட்டியை ஊட்டிவிடுகிறார். இந்த வழக்கறிஞரையும் குரங்கையும் பிணைத்துள்ள இந்த அரிய பாசப் பிணைப்பின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in