LATEST NEWS
அடச்சீ… கணவனே செய்த துரோகம்.. 20 ஆண்டுகளாக மனைவியை சீரழித்த கொடூரன்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!
இங்கிலாந்து நாட்டின் வடக்கே உள்ள மான்செஸ்டர் நகரில், 60 வயதுடைய கணவர் ஒருவர் தன் மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மான்செஸ்டர் மின்ஷூல் ஸ்ட்ரீட் கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது, 5 பாலியல் வன்கொடுமைகள், 3 பாலியல் கொடூர தாக்குதல்கள், 6 பாலியல் தாக்குதல்கள் மற்றும் மனைவியின் ஒப்புதல் இன்றி ஆபாச புகைப்படங்களை பகிர்தல் என அந்த நபருக்கு எதிராக 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தொடக்கத்தில் இவற்றை மறுத்த அவர், பின்னர் கோர்ட்டில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தில், கணவர் தவிர 28 முதல் 74 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அனைவரும், அந்த பெண்ணுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமைகளை நடத்தியுள்ளனர். எனினும், அவர்கள் அனைவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இந்த வாரத்தில் அதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு அவர்களும் வழக்கை எதிர்கொள்ள உள்ளனர்.
இது குறித்து பேசிய உதவி தலைமை காவலர் ரிக் ஜாக்சன், இந்த சம்பவம் ஒரு மிக சிக்கலான விசாரணையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பயங்கர பாதிப்பில் சிக்கியுள்ள அந்த பெண்ணுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும், அவருக்குத் தேவையான சிறப்பு ஆதரவு தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
