LATEST NEWS
அடப்பாவமே… காதலித்து கல்யாணம் செய்ததால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் சொந்தக் குடும்பமே செய்த கொடூரம்.. உறைைய வைக்கும் பகீர் சம்பவம்..!!
பஞ்சாப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது சொந்தக் குடும்பமே கால்வாயில் வீசி எறிய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமன்ப்ரீத் என்ற பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு சட்னம் சிங் என்பவரைக் காதலித்து கரம் பிடித்தார். இவர்களது காதலை அமன்ப்ரீத்தின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், கணவன்-மனைவி இருந்த வீட்டிற்குள் புகுந்து சட்னமை சராமாரியாகத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து, கர்ப்பிணியாக இருந்த அமன்ப்ரீத்தையும் கொலை செய்யும் நோக்கத்தோடு வலுக்கட்டாயமாகக் கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர். நீச்சல் தெரியாத அமன்ப்ரீத், கால்வாயில் இருந்த செடி ஒன்றை கெட்டியாகப் பிடித்தபடி சுமார் 25 நிமிடங்கள் மரணப் போராட்டம் நடத்தி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
