LATEST NEWS
CM விஜய் குறித்து ஆபாச பேச்சு… ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது 2வது வழக்கு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகிய மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழக முதலமைச்சருக்கு எதிராகத் திமுகவினர் நடத்திய கண்டனப் போராட்டத்தின் போது, இவர்கள் பொது மேடையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது மட்டும் இதே விவகாரத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கடலூரிலும் திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்துள்ளன. தமிழக முதலமைச்சர் விஜய்யை அவமதிக்கும் வகையில் ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த வழக்குகள், திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் அதிகரித்துள்ளது.
