LATEST NEWS
“என்னைத் துரத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..?” அன்னைக்கு ஓடிட்டு இப்ப வந்து சோக நாடகம் போடுறியா..? பொய் சொன்ன ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பெண்..!!
குருக்ராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடந்த விபத்து குறித்து தனது மௌனத்தைக் கலைத்த பாதிக்கப்பட்ட பெண் சியா, செவ்வாய்க்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநர் தான் செய்தது தவறு அல்ல என்பது போல நாடகமாடி அனுதாபம் தேட முயல்வதாகக் கடுமையாகச் சாடினார். அந்த ஓட்டுநர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், சியா அடிக்கடி பைக்கின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்ததாகவும், பைக் ஓட்டியது ஒரு பெண் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த சியா, “நான் வேகத்தைக் கூட்டி குறைத்ததாகவே வைத்துக்கொண்டாலும், என்னை அவ்வளவு தூரம் பின் தொடர்ந்து வர உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனது நீண்ட தலைமுடி பின்னப்பட்டிருந்ததால் பைக் ஓட்டியது பெண் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும் என்றும், அவர் தன்னைக் காரை நிறுத்தச் சொல்லி சைகை செய்ததாகவும் சியா தெரிவித்துள்ளார்.
விபத்தின் போது பதிவான கேமரா காட்சிகளைச் சுட்டிக்காட்டிய சியா, இது ஒரு தெளிவான “ஹிட் அண்ட் ரன்” வழக்கு என்பதை அந்த ஆதாரங்கள் நிரூபிப்பதாகக் கூறினார். முதல் பாதையில் இருந்து மூன்றாவது பாதைக்கு காரைத் திருப்பிக் கொண்டு வந்து தனது பைக் மீது மோதிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்ற காட்சி வீடியோவில் தெளிவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். விபத்து நடந்தவுடன் வண்டியை நிறுத்தாமல் தப்பிச் சென்றுவிட்டு, இப்போது ஊடகங்களில் வருத்தம் தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், “உங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் இருந்திருந்தால் அன்றே காரை நிறுத்தி எனக்கு என்ன ஆனது என்று பார்த்திருக்க வேண்டும்; ஓரிரு வினாடிகள் வித்தியாசத்தில் எனக்கு மிகப்பெரிய ஆபத்தோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டிருக்கக்கூடும்” என்று ஆதங்கத்தைப் பதிவு செய்தார். டெல்லி-என்சிஆர் பகுதிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
https://www.instagram.com/reel/DdRumy3TZzl/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் தொடர்பாக குருக்ராம் காவல்துறையின் சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவு, செப்டம்பர் 14 அன்று இணையத்தில் வைரலான வீடியோவைக் கண்டறிந்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. குருக்ராம் செக்டார்-56 காவல் நிலையத்தில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வராத போதிலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டுள்ளது. குருக்ராம் உதவி காவல் ஆணையர் அபிலக்ஷ் ஜோஷி கூறுகையில், காரின் பின்புறம் மோதி பெண்ணைக் கீழே தள்ளிய வீடியோவைக் கொண்டு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குருக்ராம் சாலைகளில் அதிவேகமாகவும் ஆபத்தாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது புகார் இல்லாவிட்டாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
