“எனக்கு 2-வது பொண்டாட்டியா இரு..!” குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய அப்பாவின் நண்பர்.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு 2-வது பொண்டாட்டியா இரு..!” குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய அப்பாவின் நண்பர்.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சாமன்கஞ்ச் பகுதியில், மறைந்த தந்தையின் நண்பரும், ‘மாமா’ என்று பாசமாக அழைக்கப்பட்டவருமான தௌஃபிக் என்ற காமுகன், இளம் பெண் ஒருவர் குளிப்பதைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து மிரட்டிய பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் குளித்த ரகசிய வீடியோவை அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி, “உன் குடும்பத்தாருக்கு இந்த வீடியோவை அனுப்பக் கூடாது என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்” என மிரட்டியுள்ளான். வறுமையின் காரணமாகப் பணம் தர முடியாததால் அந்தப் பெண் தனது தங்கச் சங்கிலியையும், 15,000 ரூபாயையும் கொடுத்துள்ளார். ஆனாலும் பண ஆசை அடங்காத அந்தப் பாவி, “நான் உன்னைக் காதலிக்கிறேன், எனக்கு 2-வது பொண்டாட்டியா இரு” என்று அருவருக்கத்தக்க வகையில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி, ஆசைக்கு இணங்குமாறு நரக வேதனை கொடுத்துத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான்.

இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் கதறி அழவே, அவர்கள் அந்த ஆசாமியைத் தனியாக வரவழைத்துத் தர்ம அடி கொடுத்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், சாமன்கஞ்ச் காவல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்கை மூடி, குற்றவாளியைச் சமரசம் பேசி விடுவித்த அதிர்ச்சியூட்டும் திருப்பமும் அரங்கேறியுள்ளது. போலீஸார் விடுவித்த பிறகும் அந்த நபர் மீண்டும் தொல்லை கொடுத்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தங்களுக்குள் நடந்த ஆபாச வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களை நேரடியாகக் காவல் ஆணையரிடம் சமர்ப்பித்து அதிரடிப் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்த ஆணையர், குற்றவாளி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், காமுகனுக்குச் சாதகமாகச் செயல்பட்ட இடைத்தரகர் போலீஸ் அதிகாரிகள் மீதும் தற்போது பவர்ஃபுல் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in