CRIME
“கோதாவரி ஆற்றில் முடிந்த 3 உயிர்கள்..!” 10 வயதுப் பேரன் கண்முன்னே குதித்த குடும்பம்.. தற்கொலைக் குறிப்பில் சிக்கிய சைக்கோ அதிரடி கைது..!!
ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவி பொறியாளர் தில்லப்புடி நூக்கராஜு, அவரது மனைவி மீனா மற்றும் மகள் சௌஜன்யா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோதாவரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 16 மற்றும் 17-க்கு இடைப்பட்ட நள்ளிரவில் ராஜமுந்திரி பாலத்தில் இருந்து இவர்கள் ஆற்றில் குதித்த போது, அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 வயது பேரன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூவரின் சடலங்களும் கோதாவரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்தத் துயர முடிவுக்கு முன்பாக இக்குழந்தையின் குடும்பத்தினர் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், பேரனுக்குத் துப்பாக்கிச் சூடு பயிற்சி அளித்த பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவர் பணம், சொத்து கேட்டுத் தங்களைத் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தியதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்தத் தற்கொலை வழக்கில் கைபேசி மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து 5 மாநிலங்களில் தலைமறைவாகத் திரிந்த காமுகன் சாதிக் கானை, ஆந்திரப் போலீஸார் உளவுத் தகவல்கள் மூலம் உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாதிக் கான் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், கட்டாய மதமாற்றம், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த நூக்கராஜுவின் மருமகன் ஜகதீஷ் ரெட்டியின் மரணத்திலும் இந்தச் சாதிக் கானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் வழக்கை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
