CRIME
ஐயோ கடவுளே.. வீட்டின் வெளியே தூங்கிய 6 வயது சிறுவனை.. கடத்தி சென்று 25 வயது காம மிருகத்தின் வெறிச்செயல்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் சடலவாடா கிராமத்தில், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அஜ்ஜம் ஆனந்த் (25) என்ற நபர் நள்ளிரவில் இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். சிறுவனைக் கொலை செய்த பின்னர், அவனது சடலத்தை வீட்டின் அருகே இருந்த நாற்காலியில் அமரவைத்துவிட்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அஜ்ஜம் ஆனந்த், சடலவாடா எம்.பி.டி.சி ஜனசேனா கட்சியின் வேட்பாளரான புலி சன்னி என்பவரின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், தப்பியோட முயன்ற குற்றவாளி ஆனந்தைத் துரத்திப் பிடித்துக் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஓங்கோல் ரிம்ஸ் (RIMS) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
