CRIME
“பகீர்.. பறந்து வந்த சொகுசு மினி கூப்பர் கார்..” இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய கொடூரம்.. 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
கேரள மாநிலம் அதானி அருகே அதிவேகமாக வந்த சொகுசு மினி கூப்பர் கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய மினி கூப்பர் காரின் ஓட்டுநரான சுஹைல் சஜீவ் என்பவரைப் போலீசார் உடனடியாக அதிரடியாகக் கைது செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த சமயத்தில் கார் ஓட்டுநர் சுஹைல் சஜீவ் மது போதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தாரா என்ற கோணத்தில் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த பயங்கர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
