CRIME
“அடப்பாவி.. என்ன ஒரு ஜென்மம் இவன்..?!” பெண்கள் உடை மாற்றுவதை மொபைலில் Live-ஆகப் பார்த்த ஹவுஸ் ஓனர் மகன்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
சென்னை வானகரத்தில் தனியார் நிறுவனப் பெண்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் சுவிட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை மொபைல் போனில் நேரலையாகக் கண்காணித்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் சரவணன் என்பவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தங்களின் அறையிலுள்ள மின்சார சுவிட்ச் பாக்ஸில் விசித்திரமான மாற்றம் இருப்பதை உணர்ந்து சந்தேகமடைந்த அப்பெண்கள், அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே அதிநவீன கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வானகரம் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த ரகசிய கேமராவைக் கைப்பற்றித் தங்களது தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பெண்கள் அறையில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் குத்தகைதாரரின் மகன் சரவணன் வீட்டிற்குள் புகுந்து இந்த ரகசியக் கேமராவைப் பொருத்தியது அம்பலமானது. மேலும், அந்த கேமராவைத் தனது சொந்த மொபைல் போனுடன் இணைத்து, பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட அவர்களின் மிகத் தனிப்பட்ட ரகசியச் செயல்களைப் பல நாட்களாக ஆபாச நோக்கில் நேரலையாகப் பார்த்து ரசித்து வந்துள்ளார். குற்றவாளியான சரவணனை உடனடியாகக் கைது செய்த வானகரம் போலீஸார், அவரிடமிருந்த செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
