“தலையில் 12 தையல்கள்..” நோயாளி அருகே அமர்ந்திருந்த பெண் மீது கழன்று விழுந்த ஃபேன்… அறுவை சிகிச்சை செய்த தங்கையைப் பார்க்க வந்த அக்காவுக்கு நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தலையில் 12 தையல்கள்..” நோயாளி அருகே அமர்ந்திருந்த பெண் மீது கழன்று விழுந்த ஃபேன்… அறுவை சிகிச்சை செய்த தங்கையைப் பார்க்க வந்த அக்காவுக்கு நேர்ந்த கொடூரம்..!!

Published

on

ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் இயங்கிக் கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததில், 59 வயது பெண்மணி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 12-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. காயமடைந்த பெண் காரோலி பகுதியைச் சேர்ந்த ரேணு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவமனையில் காது அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனது சகோதரியைப் பார்ப்பதற்காக ரேணு அங்கு வந்திருந்தபோது இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமை மாலை சுமார் 6 மணியளவில், ரேணு தனது சகோதரியின் படுக்கைக்கு அருகில் உள்ள மேஜையில் அமர்ந்திருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. திடீரென மின்விசிறி தலையில் விழுந்ததில் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் மற்றும் உறவினர்களிடையே பெரும் பதற்றமும் பயமும் உருவானது. விபத்து நடந்த பிறகு மருத்துவ உதவி கிடைக்க 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், ஆம்புலன்ஸ் வர அரைக மணி நேரம் ஆனதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

அதிர்ச்சி வார்டில் அவருக்குத் தையல் போடப்பட்ட போதிலும், அவர் அங்கு அனுமதிக்கப்படவில்லை; மாறாக மீண்டும் அதே ENT வார்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணி வரை எந்தவொரு மருத்துவரும் வந்து அவரை முறையாகப் பரிசோதிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தச் சமப்வம் மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் மின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in