LATEST NEWS
“பெண்களின் பாதுகாப்பு லட்சணம் இதுதானா..?” நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் ஓடும் ரயிலில் கதறிய பெண் பயணி… இந்திய ரயில்வேயை உலுக்கிய வைரல் வீடியோ..!!
ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீகங்காநகர் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவில் மதுபோதையில் இருந்த நபர்கள் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏசி 2-டயர் (AC 2-tier) பெட்டியில் பயணித்த போது, அருகில் இருந்த மூன்று ஆண்கள் மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசியதாக அந்தப் பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். குழந்தைகள் இருப்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடுத்தபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் பகிரங்கமாகப் புகார் கூறியுள்ளார்.
இந்தச் சோகமான சம்பவத்தின் போது ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஒரு காவலர் கூட இல்லை என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். டிடிஇ (TTE) மூலம் புகார் அளித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் எந்த ஒரு போலீசாரும் உதவிக்கு வரவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து வரும் ரயில் நிலையங்களில் போலீசார் வருவார்கள் எனக் கூறப்பட்டதே தவிர, எந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் வரவில்லை என அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள்?” என்று இந்திய ரயில்வே மற்றும் அரசை நோக்கி அந்தப் பெண் தனது வீடியோவில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், நள்ளிரவு நேர ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும், விவாதமும் மீண்டும் பொதுமக்களிடையே தீவிரமடைந்துள்ளது.
