LATEST NEWS
அச்சச்சோ.. ஓட்டுநர் கீழே விழுந்து கட்டுப்பாட்டை இழந்த குதிரையின் வெறி ஆட்டம்.. அடுத்தடுத்து நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் நகராட்சியில், குதிரை வண்டியை ஓட்டிச் சென்ற நபர் திடீரென கீழே விழுந்ததால், கட்டுப்பாட்டை இழந்த குதிரை சாலையில் அதிவேகமாக வெறித்தனமாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அங்கும் இங்கும் பாய்ந்து ஓடிய அந்த வண்டி, சாலையில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களிடையே பெரும் குழப்பமும், பீதியும் ஏற்பட்டது.
இந்த எதிர்பாராத தொடர் விபத்துகளில் சாலையில் சென்றுகொண்டிருந்த பல நபர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் சலசலப்பும் உள்ளூர் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பும் பதற்றமான சூழலும் நிலவியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
