LATEST NEWS
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட்டா…?! தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத டம்மி முதல்வர்… விஜய்யின் லண்டன் பயணத்தை வச்சு செஞ்ச ஐடி விங்…!!
மாநிலம் முழுவதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களுக்கு எதிரான சூழல் நிலவுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத ‘டம்மி’ முதலமைச்சர் தம்பி விஜய், மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகுசுப் பயணம் மேற்கொண்டு, நண்பர்களுடன் கார் ரேஸ் பார்த்து ஜாலியாகக் கையசைத்துக் கொண்டு ஊரான் வீட்டு நெய்யில் தனியார் ரேசில் ஸ்வீட் செய்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் “மின்வெட்டு எல்லா மாநிலத்திலும் இயல்புதான்” என வெட்கமில்லாமல் பேசுவதாகவும், துணை சபாநாயகர் “மின்வெட்டே இல்லை, இதெல்லாம் ‘Fake News’” என அப்பட்டமாகப் பொய் பேசுவதாகவும் சாடியுள்ளது. மேலும் பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள், ஊதியம் குறித்துச் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்களின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்காத அகங்காரம் கொண்ட அரசாகத் தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தனியாருக்கு உதவும் வகையில் அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்குக் கூட தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதோடு, பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும் ஆம்னி பேருந்து மாஃபியாக்களிடம் ‘Party Fund’ வாங்கிக்கொண்டு தவெக அரசு வாயை மூடி வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்துள்ளது. இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா? என்றும் திமுக ஐடி விங் கேள்விகளை எழுப்பியுள்ளது.
