LATEST NEWS
திமுகவில் வெடித்தது குடும்பப்போர்..! “தோல்விக்கு இதுதான் காரணம்” நான் அப்பவே சொன்னேன் கேட்கல…ஸ்டாலினிடம் சபரீசன் ஆவேச மோதல்..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மோதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திமுகவின் தோல்விக்குத் தனது நிறுவனத்தின் தவறான தேர்தல் வியூகங்கள் தான் காரணம் என கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் குற்றம் சாட்டுவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடும் அப்செட்டாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலினிடம் அவர் தனது கடுமையான கோபத்தையும், ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முன்பாகவே தமிழகம் எங்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழக அலை பலமாக வீசுகிறது என்பதைத் தான் முன்கூட்டியே எச்சரித்ததாகச் சபரீசன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு ஏற்றவாறு திமுகவின் தேர்தல் வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பலமுறை வலியுறுத்தியும், தலைமை அதனைச் சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்தி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கள நிலவரத்தை உணராமல் பழைய பாணியிலேயே தேர்தல் பிரச்சாரங்களையும், அணுகுமுறைகளையும் கையாண்டதே கட்சியின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம் என அவர் வாதாடியுள்ளார்.
மேலும், வேட்பாளர் தேர்வின் போது நிலவிய குளறுபடிகள் குறித்தும் அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத, பலவீனமான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் நின்றால் தோல்வி நிச்சயம் என்றும் தான் தெளிவாக எடுத்துரைத்தும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் யாரும் அதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை எனச் சபரீசன் சீறியுள்ளார். தனது எச்சரிக்கைகளை மீறி எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் வந்த தோல்விக்கு, இப்போது தன்னை அநாவசியமாகப் பழிசுமத்துகிறார்கள் என்று அவர் ஸ்டாலினிடம் ஆவேசமாகப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
