தான் பெத்த பிள்ளைய சரியா வளர்க்க தெரியல.. ஆபாசம் தான் திமுகவின் DNA… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தான் பெத்த பிள்ளைய சரியா வளர்க்க தெரியல.. ஆபாசம் தான் திமுகவின் DNA… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்..!!

Published

on

“ஆபாசமாகப் பேசுவதுதான் தி.மு.க-வின் DNA” என்று தமிழக அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர், அரசியல் நாகரிகமின்றி வரம்பு மீறிப் பேசுவதால்தான் எடப்பாடிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்று குறிப்பிட்டார்.

தி.மு.க-வினரின் அரசியல் கலாசாரத்தை விமர்சித்த அவர், மேடைகளில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் அவர்களின் வழக்கம் என்றார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர் என்றும், அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சில் எந்த அரசியல் அறமும் இல்லை என்றும் சாடினார். பேச்சில் அறமில்லாத ஒருவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், தான் பெற்ற மகனையே முறையாகவும் ஒழுங்காகவும் வளர்க்கத் தவறிய மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பார் என்று அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசுக்கு மற்றவர்களை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in