LATEST NEWS
“திக் திக் திக்…! காலை 7.15 மணிக்கு எழுந்த மரண அலறல்..!” பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 7 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் விபத்து..!!
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம், சுரா பள்ளத்தாக்கு பாதையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக ஒரு கூர்மையான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. காலை 7:15 மணி அளவில் நிகழ்ந்த இந்தத் திடுக்கிடும் சம்பவத்தில், பயணிகளின் கூக்குரலைக் கேட்டு விரைந்து வந்த சுற்றியுள்ள மக்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். இந்த சோகமான சம்பவத்தில் 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர். மேலும் 11 நபர்கள் படுகாயமடைந்த நிலையில், அதில் தீவிர காயங்களுக்கு உள்ளான 6 பேருக்கு சம்பா அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனப் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அங்குப் பருவமழைத் தொடக்கத்திலிருந்து இதுவரை சாலை விபத்துகளில் 78 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்பா பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
