LATEST NEWS
“பழிக்குப் பழி இல்லை… அன்பே பதில்..!” ரயில்வே பரிசோதகரை கண்கலங்க வைத்த பயணி செய்த நெகிழ்ச்சி காரியம்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
பொதுப் பிரிவு பயணச்சீட்டுடன் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணித்த ஓவியக் கலைஞர் ஆகாஷ் செல்வராசுவுக்கு, பயணச்சீட்டு பரிசோதகர் ரயில்வே விதிமுறைகளின்படி டிஜிட்டல் முறையில் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்திய பிறகும் கோபப்படாமல், அந்த ஓவியர் அந்த பரிசோதகரின் தோற்றத்தை நினைவில் கொண்டு அவரது உருவத்தை மிகத் துல்லியமாக வரைந்தார். அந்த வரைபடத்தைக் கண்ட TTE மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அதை இன்னும் சிறப்பாக வரைந்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று ஆகாஷ் ஓவியத்தைச் செப்பனிட்டு வழங்கியபோது, அதைக்கண்ட அந்த TTE-யின் கண்கள் நெகிழ்ச்சியிலும் துயரத்திலும் கண்ணீரால் நிரம்பின.
https://www.instagram.com/reel/DYhzoHUTKlm/?utm_source=ig_embed&ig_rid=A_wALF5N2giApb0uSYNctAi
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பதிவுசெய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது. “ஒருவர் உன்னைக் காயப்படுத்தினாலும் அன்பையும் கருணையையும் தேர்ந்தெடுங்கள்” என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி ஆகாஷ் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கடமையைச் செய்த அதிகாரிக்கு அநீதி நினைக்காமல், தனது கலையால் அவரது மனதைத் தொட்ட ஓவியரின் செயலை இணையவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
