LATEST NEWS
அய்யயோ.. சாலையில் வெறித்தனமாக ஓடிவந்த அசுரக் காளை.. முதியவரைத் தூக்கி வீசிய கொடூரம்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்.. ஷாக்கிங் வீடியோ..!!
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் காரியாதார் பகுதியில், குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஆக்கிரமிப்பு மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் வெறித்தனமாக ஓடிவந்த காளை மாடு ஒன்று பாதசாரிகளைத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நகரின் முக்கியச் சாலையில் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த காளை மாடு ஒன்று திடீரெனப் பாய்ந்து அங்கிருந்தவர்களை நோக்கி ஆக்ரோஷமாகத் துரத்தியுள்ளது.
இந்தக் காளையின் எதிர்பாராத அசுரத் தாக்குதலில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் நிலைதடுமாறி தரையில் தூக்கி வீசப்பட்டார். முதியவரை அந்த மாடு தொடர்ந்து தாக்க முயன்ற போது, ஆபத்தான சூழலையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கைகளில் தடிகளுடன் ஓடிவந்து மாட்டை அடித்து விரட்டி, முதியவரைப் பத்திரமாக மீட்டனர். இந்தத் தாக்குதல் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மாடுகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
