CRIME
“காதலர்களுக்கு தனி அறை…” கஃபே கேபினில் கர்ப்பமான 17 வயது பள்ளிச் சிறுமி – கருக்கலைப்பு செய்யச் சென்ற இடத்தில் அம்பலமான ரகசியம்.. போலீஸ் அதிரடி..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மூரங்கா சௌக் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது முன்னாள் வகுப்புத் தோழரான சமீர் கான் (19) என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2024-ம் ஆண்டில் பள்ளியில் 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் ஒன்றாகப் படித்தபோது நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. சமீர் கான் பள்ளியை விட்டு நின்ற பிறகும் இவர்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
கடந்த மே 1-ம் தேதி இரவு 7 மணியளவில், இந்த ஜோடி அங்குள்ள கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட, இளம் தம்பதியருக்கான தனி அறைகள் கொண்ட ஒரு தனியார் கேபின் கஃபேக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சமீபத்தில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது தாயும் பாட்டியும், அவசர அவசரமாகக் கருக்கலைப்பு செய்வதற்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமிக்கு வயது குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த தந்தோலி மற்றும் கோட்வாலி போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று, காதலன் சமீர் கான் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள காதலனைத் தேடி வரும் போலீசார், இளம் ஜோடிகளுக்குத் தனி அறைகளை வழங்கி வரும் இத்தகைய கேபின் கஃபேக்களின் உரிமம் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழுமையான சோதனைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
