அடப்பாவமே…! சூதாடப் பணம் தராத 70 வயது தாய்.. கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொன்று சாணத்தால் ரத்தத்தை மெழுகிய மகன்..! தப்பிக்க முயன்றும் போலீசில் மாட்டிய பரபரப்பு பின்னணி..! ஜார்க்கண்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவமே…! சூதாடப் பணம் தராத 70 வயது தாய்.. கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொன்று சாணத்தால் ரத்தத்தை மெழுகிய மகன்..! தப்பிக்க முயன்றும் போலீசில் மாட்டிய பரபரப்பு பின்னணி..! ஜார்க்கண்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்குட்பட்ட காகரா காவல் எல்லைக்குட்பட்ட நாத்பூர் கிராமத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பரதேசியா மஹ்தோ என்ற நபர் தன் தாயார் தேத்ரி தேவியிடம் சூதாட்டம் விளையாடுவதற்காகப் பணம் கேட்டுள்ளார். தாய் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகன், கூர்மையான கோடாரி மற்றும் அரிவாளால் தன் தாயின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்த பிறகு, அந்த நபர் காவல்துறைக்குச் சந்தேகம் வராதவாறு ஆதாரங்களை அழிக்க முயன்றார். வீட்டில் சிந்தியிருந்த ரத்தக் கறைகளை மாட்டுச் சாணம் மற்றும் தண்ணீரைக் கொண்டு மெழுகிச் சுத்தம் செய்தார். அதன்பின் தாயின் சடலத்தைக் கொண்டு சென்று வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வயல்வெளியில் வீசிவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் கழுவி வைத்துள்ளார். இருப்பினும், வயல்வெளியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரின் சடலத்தைக் கண்ட கிராம மக்கள் உடனடியாகக் காகரா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் பரதேசியா மஹ்தோவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவரே தன் தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in