CRIME
20 வருஷமா தப்பிச்சு வாழ்ந்தும் விடாத பகை… சித்தப்பா இறந்த துக்கத்தில் ஊருக்கு வந்த இடத்தில் கொடூரக் கொலை… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கேவிபி காலனியில் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோட்டா’ என்று அழைக்கப்படும் ஒரு நபர், 20 ஆண்டுகளாகத் தன் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி, கம்புகளாலும் கத்திகளாலும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்குப் பின்னால் 20 ஆண்டு காலப் பகை ஒளிந்துள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு சோட்டாவின் முதல் மனைவியுடன் ‘புல்லையா’ என்பவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் புல்லையா கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சோட்டா மீது குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் வழக்கு முடிவடைந்ததும், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டு, எதிரிகளுக்குப் பயந்து தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் குண்டூரில் இருந்த சோட்டாவின் சித்தப்பா மரணமடைந்ததால், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க சோட்டா ஊருக்குத் திரும்பியுள்ளார். அவர் ஊருக்கு வந்ததை அறிந்த புல்லையாவின் குடும்பத்தினர், பழிவாங்கச் சரியான சமயம் பார்த்துத் திட்டமிட்டு, சோட்டா சாலையில் தேநீர் குடிக்க வந்தபோது அவரைத் தடியடி மற்றும் கத்திக்குத்து மூலம் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
