“அய்யோ என் மகள்களைக் காப்பாத்த யாருமே இல்லையா..?!” சொந்த மகளையே வன்கொடுமை செய்த தந்தை.. அந்த கோலத்தில் பார்த்த மனைவி… இணையத்தில் வைரலாகும் தாயின் கண்ணீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ என் மகள்களைக் காப்பாத்த யாருமே இல்லையா..?!” சொந்த மகளையே வன்கொடுமை செய்த தந்தை.. அந்த கோலத்தில் பார்த்த மனைவி… இணையத்தில் வைரலாகும் தாயின் கண்ணீர் வீடியோ..!!

Published

on

புது டெல்லியைச் சேர்ந்த நேஹா சுக்லா என்ற பெண், தனது கணவர் ரிஷி சுக்லாவுக்கு எதிராகத் தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர வைக்கும் மிகக் கடுமையான புகாரை முன்வைத்துள்ளார். இந்தச் செயலைத் தான் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து உடனடியாகப் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பவன் சர்மா புகாரைக் காதுகொடுத்துக் கேட்கவும், நடவடிக்கை எடுக்கவும் முற்றிலும் மறுத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மாமியார் ஊர்மிளா சுக்லாவும் ஒரு குற்றவாளி என்றும், தனது காமவெறி பிடித்த மகனைக் காப்பாற்றுவதற்காக அவர் தற்பொழுது தன்னைத் தொடர்ந்து கடுமையான முறையில் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் நேஹா சுக்லா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/GK010200/status/2093925314766446949/video/1

Advertisement

தனது கணவரின் கொடூரமான காமப் பசியில் இருந்து தங்களது மகள்களைக் காப்பாற்றவும், தங்களுக்கு நீதி கிடைக்கவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மனிதநேயம் மிக்கவர்கள் யாராவது உடனடியாக முன்வந்து உதவ வேண்டும் என அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். தங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்காத பட்சத்தில், தனது மகள்களுடன் சேர்ந்து தனது சொந்த வாழ்க்கையையும் முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தவிப்புடன் பேசியுள்ளார். இச்சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in