30 நிமிடத்தில் பயங்கரம்… கோரத்தாண்டவமாடிய திடீர் காட்டாற்று வெள்ளம்… ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட 62 பேர்.. வைரலாகும் பகீர் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

30 நிமிடத்தில் பயங்கரம்… கோரத்தாண்டவமாடிய திடீர் காட்டாற்று வெள்ளம்… ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட 62 பேர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!

Published

on

அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் சனிக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பிரைட் ஏஞ்சல் கனியன் மற்றும் ஃபேண்டம் ரேஞ்ச் பகுதிகளில் பெய்த கனமழையால், பாறைகள், உலோகக் கட்டட இடிபாடுகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டு கொலராடோ ஆற்றில் கலந்தன. இந்தத் திடீர் வெள்ளத்தில் சிக்கி 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்குத்தான மலைப்பகுதியில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 1 அங்குலம் வரை பெய்த கனமழையே இந்தத் திடீர் வெள்ளத்திற்குக் காரணமாகும். வெள்ளத்தின் வீரியத்தால் அங்குள்ள நடைபாலங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு, அப்பகுதியின் நிலப்பரப்பே மாறியுள்ளது. மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை காயங்கள் ஏதுமின்றி 62 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisement

இப்பகுதிகளில் திங்கட்கிழமை வரை மேலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மேலும் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பிரைட் ஏஞ்சல் முகாம் மற்றும் சுற்றுலாப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், கொலராடோ ஆற்றில் படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in