“இது என்னோட குழந்தையா..?” காதலன் கேள்வியால் ஆத்திரம்… ஆணுறுப்பை வெட்டி குப்பையில் வீசிய காதலி… நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்னோட குழந்தையா..?” காதலன் கேள்வியால் ஆத்திரம்… ஆணுறுப்பை வெட்டி குப்பையில் வீசிய காதலி… நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!

Published

on

கர்ப்பம் தொடர்பான தகராறில், அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலைச் சிதைத்த குற்றத்திற்காக 34 வயதான ஷென்டிங் குவோ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 38 வயதான டஸ்டின் நால்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தான் கர்ப்பமாக இருக்கும் விபரத்தைக் காதலியான குவோ கூறியபோது, பிறக்கப்போகும் குழந்தை தன்னுடையது தானா என நால்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது.

தாக்குதலின் போது காதலன் தூங்குவது போல் நடிக்கிறாரா என்பதைப் பார்ப்பதற்காக, அவரது ஆணுறுப்பைத் துண்டித்து குளியலறை குப்பைத் தொட்டியில் வீசியதாக அந்தப் பெண் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், அருகிலுள்ள கடையில் மருந்துகளை வாங்கி வந்து அவரது காயங்களுக்கு முதலுதவி செய்ய முயன்றபோதும், நால்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

தற்போது கைது செய்யப்பட்டுள்ள குவோ மீது உடல் காயம் ஏற்படுத்துதல், சடலத்தை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காதலனைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், ஆத்திரத்தின் உச்சத்திலேயே இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேசா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இப்பெண்ணுக்கு தற்போது மனநலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in