LATEST NEWS
“சார், மேம்னு கூப்பிட்டா ஓகே… அங்கிள்னு சொன்னா கடுப்பாயிடுவாங்க..!” அமெரிக்காவில் கவனமாக இருக்க இந்தியப் பெண் கொடுத்த அட்வைஸ்..! வைரல் வீடியோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டின் கலாச்சார நடைமுறைகளைப் புரிந்துகொண்டு வாழ்வது அவசியம். இந்தியாவில் வயது முதிர்ந்தவர்களையோ அல்லது தெரியாதவர்களையோ மரியாதையுடன் ‘அங்கிள்’ அல்லது ‘ஆண்டி’ என்று அழைப்பது வழக்கமான ஒன்று. ஆனால், அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்களை இவ்வாறு அழைத்தால் அவர்களுக்கு கோபம் வரக்கூடும் என்று அமெரிக்காவில் வசிக்கும் ‘கோமல் பாண்டே’ என்ற இந்தியப் பெண் ஒரு வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
அமெரிக்க கலாச்சாரத்தின்படி, அங்குள்ளவர்களிடம் யாராவது ‘அங்கிள்’ அல்லது ‘ஆண்டி’ என்று கூறினால், அவர்கள் உடனடியாக அதிர்ச்சியடைவார்கள். ஏனெனில், அவர்களை வேறு யாரையோ கூப்பிடுவதாக நினைப்பார்கள் அல்லது தாங்கள் வயதானவர்கள் என்ற உணர்வை அது அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். எனவே, அமெரிக்காவில் உள்ளவர்களை ‘சார்’, ‘மேம்’ அல்லது அவர்களுடைய பெயரைக் குறிப்பிட்டு நேரடியாக அழைப்பதே சரியான முறையாகும்.
https://www.instagram.com/reel/Dchp_vIhUfA/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் கூட இதே போன்ற கலாச்சாரம் வர வேண்டும் என்றும், இங்கு 60 வயது முதியவர் கூட 25 வயது நபரைக் கண்டால் அங்கிள் அல்லது ஆண்டி என்று அழைத்து விடுகிறார் என்றும் பயனர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா செல்பவர்கள் இந்த பண்பாட்டு மாற்றத்தை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது என்று அந்தப் பெண் எச்சரித்துள்ளார்.
