CRIME
வாங்கிய கடனுக்காக இப்படியா..?!தோழி என்று பாராமல் தோழன் செய்த வெறிச்செயல்.. புத்தாண்டு நள்ளிரவில் நடந்த கொடூரம்.. அமெரிக்க போலீஸையே மிரள வைத்த இந்திய வாலிபரின் ரகசிய ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது முன்னாள் அறைத்தோழியான இந்தியப் பெண்ணைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடிய அர்ஜுன் சர்மா (26) என்ற வாலிபர், டெல்லி நீதிமன்றத்தால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் கொலம்பியா பகுதியில் வசித்து வந்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிகிதா கொடிஷாலா (27) என்ற பெண் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது முன்னாள் அறைத்தோழரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் நிகிதா பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் கடந்த 2025 டிசம்பர் 31 அன்று கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அமெரிக்க போலீஸார் உறுதி செய்து, அர்ஜுனுக்கு எதிராக முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தனர்.
அமெரிக்காவில் கொலையை அரங்கேற்றிவிட்டு இந்தியாவுக்குத் தப்பிய அர்ஜுன் சர்மாவை, அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த பணமோசடிப் புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் தனிப்படை போலீஸார் ஆக்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ரகசியமாகக் கண்டுபிடித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் தரவு மற்றும் உத்தி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிகிதாவிடம், கடந்த 2025 ஆகஸ்ட்-செப்டம்பர் காலக்கட்டத்தில் வேலையை இழந்த அர்ஜுன் சர்மா பெருமளவில் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், நிதித் தகராறு காரணமாகவே அவர் இந்தத் துணிகரக் கொலையைச் செய்துள்ளார் என்று நிகிதாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அர்ஜுனுக்கு எதிராகத் தெலங்கானாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாகப் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆக்ராவில் பிடிபட்ட அர்ஜுனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தின் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நிலுவையில் இருந்ததால், ஹைதராபாத் போலீஸார் உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று ஆஜர்படுத்தப்பட்ட அர்ஜுன் சர்மா, கொலை வழக்கில் அதிகாரப்பூர்வமாகக் காவலில் எடுக்கப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்வதேசச் சட்ட நடைமுறைகளின்படி அர்ஜுனை மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இந்த அதிரடி கைது தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்கான முக்கிய மைல்கல் என ஹைதராபாத்தில் உள்ள நிகிதாவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
