பகீர்…! 30 செ.மீ தூரத்தில் நின்ற எமன்… சுறா முகத்திலேயே விழுந்த ‘லெஃப்ட் ஹூக்’ குத்து..! ஒரு கையை இழந்து சாவுக்கே சவால் விட்ட பெண்ணின் சிலிர்க்க வைக்கும் நிஜக் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்…! 30 செ.மீ தூரத்தில் நின்ற எமன்… சுறா முகத்திலேயே விழுந்த ‘லெஃப்ட் ஹூக்’ குத்து..! ஒரு கையை இழந்து சாவுக்கே சவால் விட்ட பெண்ணின் சிலிர்க்க வைக்கும் நிஜக் கதை..!!

Published

on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள கூஜி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த லியா ஸ்டீவர்ட் என்ற 34 வயதுப் பெண், ஒரு பெரிய கிரேட் ஒயிட் சுறா மீனால் கோரமான தாக்குதலுக்கு உள்ளானார். அந்தச் சமயத்தில் சுறா மீன் அவரது காலைக் கவ்விப் பிடித்துக்கொண்டதுடன், அவரது முகத்திற்கு மிக அருகில் சுமார் 30 சென்டிமீட்டர் தொலைவில் வந்து வாயைத் திறக்கத் தொடங்கியது. சுறா மீனின் அந்த பயங்கரமான தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தபோதிலும், தற்காத்துக் கொள்ள போராட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அந்த இக்கட்டான தருணத்தில், சுறா மீன் தனது தலையையோ அல்லது முகத்தையோ கடித்துவிடக் கூடாது என்பதற்காக லியா அதை எதிர்த்துத் தாக்கத் தீர்மானித்தார். “நான் வலது கை பழக்கம் உள்ளவள், எனவே என் தலையைக் காப்பற்ற எந்தக் கையை இழக்கத் தயார் என்று யோசித்து, என் இடது கையால் சுறாவின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டேன்” என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், “என் 18 மாதக் குழந்தை அகஸ்ட் தாய் இல்லாமல் வளர்ந்துவிடக் கூடாது, எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும்” என்ற எண்ணமே அவருக்கு அந்தப் போராட்டத்திற்கான துணிச்சலைத் தந்தது.

Advertisement

இந்த பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு, கடலிலிருந்த ஒருவர் உதவியுடன் அவர் கரையேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை மற்றும் இரண்டு வாரக் கோமா நிலைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற இடது கையைத் துண்டிக்க வேண்டியிருந்தது. மரணத்தின் விளிம்பிற்குச் சென்று, ஒரு கையை இழந்தபோதிலும், தைரியமாகப் போராடி சுறா தாக்குதலிலிருந்து உயிர் தப்பிய லியா ஸ்டீவர்ட்டின் இந்தச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in