CRIME
“பள்ளி முடிஞ்சதும் என்னோடு இரு..” 2 மாணவர்களுடன் கார் மற்றும் வகுப்பறையில் உல்லாசம்.. 32 வயது ஆசிரியை செய்த கொடூரம்.. கோர்ட் கொடுத்த சாட்டையடி தீர்ப்பு..!!
ஆஸ்திரேலியாவில், இரண்டு பதின்ம வயது பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக 32 வயதான டெய்லா லீ பிரெய்லி என்ற திருமணமான ஆசிரியைக்கு சிட்னி நீதிமன்றம் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்டதற்குக் காரணம் ‘பைபோலார் மனக்கோளாறு’ தான் என்று அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தண்டனை அறிவிக்கப்பட்டபோது, அவர் தனது பெற்றோரையும் ஆதரவாளர்களையும் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். இந்த விபரீத வழக்கினால் அவர் ஏற்கனவே தனது ஆசிரியர் வேலையையும், கணவரையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2024-ல், தனது காரில் 17 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டின் கீழ் பிரெய்லி முதன்முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பிணையில் வந்த சில வாரங்களிலேயே, வகுப்பறையில் 16 வயதுடைய மற்றொரு மாணவனிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார். அந்த 16 வயது மாணவரை இணையம் வழியாகத் தன்வசப்படுத்திய ஆசிரியை, தான் குளிக்கும்போது எடுத்த நிர்வாணப் புகைப் படத்தை அவனுக்கு அனுப்பியுள்ளார். மேலும், அதற்குப் பதிலாக அந்த மாணவனையும் நிர்வாணப் படத்தை அனுப்புமாறு கட்டாயப்படுத்தியதோடு, “பள்ளி முடிந்ததும் என்னுடன் இரு” என்று ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த மாணவர் தூக்கமின்மையாலும், கடுமையான மன உளைச்சலாலும் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின் போது, ஆசிரியை பிரெய்லிக்கு ‘பைபோலார் கோளாறு’ இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது அவரது பகுத்தறியும் திறனைக் குறைத்து, பாலியல் நாட்டத்தை அதிகரித்ததால், ‘சிறுவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும்’ என்ற ‘தவிர்க்க முடியாத உந்துதல்’ அவரிடம் இருந்ததாகவும் அவரது தரப்பில் வாதாடப்பட்டது. எனினும், தனது ஆசிரியர் என்ற அதிகாரமிக்க பதவியைப் பயன்படுத்தி மாணவர்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று நீதிபதி கடுமையாகச் சாடினார். 17 வயது மாணவர் வழக்கில் 9 மாதங்களும், 16 வயது மாணவர் வழக்கில் ஓராண்டும் என மொத்தம் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் ‘குழந்தைகள் பாதுகாப்புப் பதிவேட்டில்’ சேர்க்கப்படுவார் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
