LATEST NEWS
“விடைகொடு விடைகொடு மனமே” சர்வதேச கிரிக்கெட்டுக்கு ‘டாட்டா’ காட்டிய மேக்ஸ்வெல்.. ஆப்கானை அலறவிட்ட ‘201 ரன்’ உலக சாதனை நாயகன் திடீர் ஓய்வு..!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய தூணாக விளங்கிய இவரின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில், கடுமையான தசைப்பிடிப்பையும் பொருட்படுத்தாமல் ஒற்றை ஆளாகப் போராடி இரட்டைச் சதம் (201*) விளாசி அணியை வெற்றி பெறச் செய்த அவரது இன்னிங்ஸ், உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக எப்போதும் நினைவுகூரப்படும்.
