CRIME
“கர்ப்பம்… கட்டாயக் கருக்கலைப்பு… குழந்தை விற்பனை” பெற்ற மகளைச் சீரழித்து குழந்தையை வியாபாரம் செய்த தந்தை.. பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது..!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், தாயால் கைவிடப்பட்ட 16 வயது சிறுமியை, அவரது 38 வயது பெற்ற தந்தையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் அச்சிறுமி இரண்டு முறை கர்ப்பமடைந்துள்ளார். முதல்முறை கர்ப்பமானபோது, தந்தையின் கட்டாயத்தால் அவருக்கு வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை சிறுமி மீண்டும் கர்ப்பமான நிலையில், அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கத் தந்தை திட்டமிட்டார். சிறுமியின் வயதை மறைத்து, அவரை திருமணமான ஒரு வயது வந்த பெண் போலக் காட்டி போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தையை மற்றொரு நபருக்குப் பணத்திற்காக விற்றுள்ளனர்.இக்கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இக்குற்றத்தில் தொடர்புடைய சிறுமியின் தந்தை, உடந்தையாக இருந்த அத்தை, முறைகேட்டிற்கு உதவிய செவிலியர் (நர்ஸ்) உட்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
