LATEST NEWS
“அப்பா… அப்பா… போகாதீங்கப்பா;..!” ராணுவ வீரரான தந்தையைக் கட்டிப்பிடித்து கதறிய குழந்தைகள்.. இணையத்தையை அழவைத்த வீடியோ..!!
இரண்டு மாத கால விடுமுறை முடிந்து, அந்த இளம் ராணுவ வீரர் மீண்டும் தனது எல்லைப் பணிக்குத் திரும்பும் அந்தப் பிரிவு உபச்சாரக் காட்சி, பார்ப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் உருகும் தருணமாக அமைந்துள்ளது. கடந்த எட்டு மாதங்களாகத் தாய்நாட்டின் எல்லையில் காவல் காத்துவிட்டு, வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த சில நாட்களிலேயே, சில நிமிடங்களுக்கு முன்பு வரை மகிழ்ச்சியிலும் சிரிப்பொலியிலும் திளைத்திருந்த அந்த வீடு, தற்போது அவரது பிரியாவிடையால் விம்மல்களாலும் தேம்பல்களாலும் நிறைந்துள்ளது.
2 महीने की छुट्टी खत्म… फिर से विदाई, विडिओ भावुक कर देगा आपको, शायद आप रोने भी लगे!
8 महीने बाद घर लौटा था जवान।
सिर्फ 2 महीने परिवार के साथ बिताए… और अब फिर ड्यूटी पर रवाना।
बच्चों के आंसू देखकर दिल पिघल जाता है, घर में थोड़ी देर पहले जो खुशियाँ लौटी थीं, आज वही घर आंसुओं… pic.twitter.com/S2ii8URqBt— Adesh_26 (@SonOfBharat_88) August 19, 2026
நாட்டைக் காக்கும் புனிதப் பணிக்காகத் தங்கள் சொந்த பந்தங்களை விட்டுப் பிரியும் வீரர்களின் தியாகமும், அவர்களின் குழந்தைகளின் கண்ணீரும் பார்ப்போரின் இதயத்தை ரணமாக்குகிறது. தேசத்தின் எல்லையைப் பாதுகாக்க நம் வீரர்கள் மீண்டும் மீண்டும் வீட்டை விட்டுப் புறப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் பிரிவுத் துயரத்தின் வலி குறைவதே இல்லை. நாட்டிற்காகவும் நமது பாதுகாப்பிற்காகவும் தங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் தியாகம் செய்யும் அந்தத் துணிச்சலான இளம் வீரர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாய் நிற்கும் குடும்பத்தினருக்கும் நமது கோடான கோடி வீர வணக்கங்கள்! ஜெய் ஹிந்த்!
