LATEST NEWS
திமுக தனது ஆட்சிக்காலம் முழுவதும் அந்த அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்..? இப்போ வெளியிட தயாரா..? பெ.சண்முகம் அதிரடி..!!
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அரசின் இந்த முடிவிற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், அரசியல் ரீதியாக இந்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை திமுக தனது ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன் என்றும், அதை பொதுவெளியில் வெளியிட திமுக தயாரா என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னையில் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என அமைச்சர் கீர்த்தனா எச்சரித்துள்ளார். ஆனால், பரந்தூர் பகுதியில் திமுக பிரமுகர்கள் பலர் முன்கூட்டியே நிலங்களை வாங்கிப் போட்டுள்ளதால் தான், இத்திட்டம் கைவிடப்படுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள் என தவெக தரப்பு விமர்சித்துள்ளது.
