டெல்லியில் கொடூரம்..! குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு… மென்பொருள் பொறியாளர் கணவரை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி..!! – cinefeeds
Connect with us

CRIME

டெல்லியில் கொடூரம்..! குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு… மென்பொருள் பொறியாளர் கணவரை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி..!!

Published

on

டெல்லியில் குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பான குடும்பத் தகராறில், வினய் குப்தா (31) என்ற மென்பொருள் பொறியாளர் அவரது மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த வினய் குப்தாவுக்கும், அவரது மனைவி ரேகாவிற்கும் இடையே இன்று காலை இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறைத் தொடர்ந்து, ரேகா தனது தந்தை, சகோதரர்கள் மற்றும் மாமா ஆகியோரை வீட்டிற்கு அழைத்து வந்து கணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். வினய்யின் தாய் தடுத்தும் கேளாமல், திட்டமிட்டு வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு வினய்யின் கழுத்தை நெரித்தும், மார்பில் உதைத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பின் பக்கத்து வீட்டுக்காரரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வினய், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மகன் கொல்லப்பட்டது குறித்து வினய்யின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வினய்யின் மனைவி ரேகா, அவருடைய இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in