“மங்காத்தா அஜித் ரேஞ்சுக்கு JCB-யை ஓட்டிய திருடன்..!” 4 ஸ்டேஷன் போலீஸை அலறவிட்ட சேஸிங்.. இறுதியில் திருடன் செய்த ‘அல்டிமேட்’ காரியம்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மங்காத்தா அஜித் ரேஞ்சுக்கு JCB-யை ஓட்டிய திருடன்..!” 4 ஸ்டேஷன் போலீஸை அலறவிட்ட சேஸிங்.. இறுதியில் திருடன் செய்த ‘அல்டிமேட்’ காரியம்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!

Published

on

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் திருடப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் காவல்துறை தடுப்புகளை உடைத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கல்லிக்கோட் காவல் நிலையப் பகுதியில் ஜே.சி.பி. திருடுபோனதாக வந்த தகவலைத் தொடர்ந்து, கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு காவல் நிலையக் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பொதுவாக வேகமாகச் செல்வதற்காக உருவாக்கப்படாத ஜே.சி.பி. இயந்திரத்தை மர்ம நபர் மின்னல் வேகத்தில் ஓட்டியதைக் கண்ட போலீசார், வழியில் பல இடங்களில் தடுப்புகளை அமைத்து வழிமறிக்க முயன்றனர். ஆனால், எதற்கும் அஞ்சாத அந்த நபர் அனைத்துத் தடுப்புகளையும் அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பியோடினார். இறுதியில், கபிசூர்யநகர் எல்லைக்குட்பட்ட குடியாலி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை விட்டுவிட்டு அவர் கால்நடையாகத் தப்பியோடிய நிலையில், வாகனத்தை மீட்ட போலீசார் தலைமறைவான மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in