“அம்மா அடிக்காதீங்க…” வெறும் 5 ரூபாய் காசுக்காகப் பெற்ற மகனை சித்திரவதை செய்த கொடூரம்.. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா அடிக்காதீங்க…” வெறும் 5 ரூபாய் காசுக்காகப் பெற்ற மகனை சித்திரவதை செய்த கொடூரம்.. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள புல்வாமாவ் கிராமத்தில், பெற்ற தாயே தன் குழந்தைக்கு எமனாக மாறிய நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. புகையிலை வாங்குவதற்காக அந்தத் தாய் தன் மகனிடம் 20 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், அந்தக் குழந்தை 15 ரூபாய்க்கு மட்டுமே புகையிலை வாங்கி வந்துள்ளது. மீதமுள்ள 5 ரூபாய்க்குச் சரியான கணக்குச் சொல்லத் தெரியாமல் அந்தகுழந்தை திகைத்து நின்றுள்ளது. வெறும் 5 ரூபாய் காசுக்காகப் பெற்ற பிள்ளை என்றும் பாராமல், அந்தத் தாய் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று குழந்தையை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

இந்தக் கொடுமையான தாக்குதலால் அந்தக் குழந்தை பலத்த காயமடைந்து மயக்கமடைந்துள்ளது. குழந்தையின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தனது குழந்தையையே இவ்வளவு கொடூரமாகத் தாக்கிய அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in