“நீ வராவிட்டால் விஷம் அருந்துவேன்..!” மனைவியின் கொடூரமான பதிலால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. 5 பிள்ளைகளைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ வராவிட்டால் விஷம் அருந்துவேன்..!” மனைவியின் கொடூரமான பதிலால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. 5 பிள்ளைகளைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டம் கசோடா கிராமத்தில், கூலித் தொழிலாளியான லல்லு கௌதம் (45) என்பவரின் மனைவி சோனி, தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். 20 வருட குடும்ப வாழ்க்கையையும், 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளிட்ட ஐந்து குழந்தைகளையும் மறந்துவிட்டுச் சென்ற மனைவியை மீட்கக் கோரி, முதலமைச்சரின் இணையதளம் வரை லல்லு புகார் அளித்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், தன் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார்.

அப்போது, “நீ திரும்ப வராவிட்டால் விஷம் குடித்துவிடுவேன்” என்று லல்லு மிரட்டியதற்கு, சற்றும் மனமிரங்காத சோனி, உணர்ச்சியற்ற முறையில் “சாப்பிடு” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த லல்லு, தனது மதுவில் விஷம் கலந்து குழந்தைகளின் கண்முன்னே குடித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்ற தாயின் கள்ளத்தொடர்பாலும், தந்தையின் தற்கொலை முடிவாலும் அநாதையாகிவிட்ட அந்த ஐந்து பிஞ்சு குழந்தைகளின் துயரம் அப்பகுதியை உலுக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in