13 வயசுல இப்படியொரு கொடூரம்..! Iphone-க்காக தாத்தாவை கொலை செய்த பேத்தி.. 8th படிக்கும் காதலனின் நண்பர்களை வரவழைத்து செய்த பயங்கரம்… கேரளாவை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

13 வயசுல இப்படியொரு கொடூரம்..! Iphone-க்காக தாத்தாவை கொலை செய்த பேத்தி.. 8th படிக்கும் காதலனின் நண்பர்களை வரவழைத்து செய்த பயங்கரம்… கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

கேரளாவில் தனக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்குவதற்காக, 13 வயது பேத்தி தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு தாத்தாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் கருவற்றா பகுதியில் வசித்து வந்த 65 வயதான சிவன் குட்டி என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி உட்பட 4 சிறுவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாயும் பாட்டியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தனக்கு ஐபோன் வாங்கவும், தனது காதலனுக்கு பைக் வாங்கவும் பணம் தேவைப்பட்டதால், வீட்டில் தனியாக இருந்த தாத்தாவைக் கொலை செய்து நகைகளைத் திருட சிறுமி திட்டமிட்டுள்ளார். இதற்காகக் காதலனின் நண்பர்கள் 3 பேரை வீட்டிற்கு வரவழைத்து, தாத்தாவின் கை, கால்களைக் கட்டிப் போட்டு மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளனர்.

Advertisement

இந்த கொடூரக் கொலையைச் சிறுமி வீடியோ கால் கொலைக்குப் பின்னர் தாத்தா அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் அலமாரியில் இருந்த பணத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிவன் குட்டி இரண்டு நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததால், அவரது மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது இந்த பகீர் உண்மை வெளிவந்தது. கைது செய்யப்பட்டுள்ள அனைத்துச் சிறுவர்களும் தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in