“ஐஆர்எஸ் அதிகாரின்னு தான் பொண்ணு கொடுத்தேன்” அரசியலுக்கு வருவேன்னு தெரிஞ்சா கொடுத்திருக்க மாட்டேன்” மாமனார் மைண்ட் வாய்ஸ்.. தவெக அமைச்சர் அருண்ராஜை கலாய்த்த புஸ்ஸி ஆனந்த்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐஆர்எஸ் அதிகாரின்னு தான் பொண்ணு கொடுத்தேன்” அரசியலுக்கு வருவேன்னு தெரிஞ்சா கொடுத்திருக்க மாட்டேன்” மாமனார் மைண்ட் வாய்ஸ்.. தவெக அமைச்சர் அருண்ராஜை கலாய்த்த புஸ்ஸி ஆனந்த்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின்ம் முக்கியத் தலைவரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், தனது சக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் குறித்துப் பேசிய சுவாரசியமான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக-வில் ஆதவ் அர்ஜுனாவை இணைத்துக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அவர், “ஆதவ் அர்ஜுனா கண்டிப்பா வேண்டும்னு தான் நம்ம கட்சியில் இணைத்துக் கொண்டோம்” என்று தெரிவித்தார். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (VCK) புத்தகம் தொடர்பான ஒரு சர்ச்சையால் அவர் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, “ஒரு புத்தகத்தால் அவரை அங்க விட்டாங்க, நாங்க இங்க இட்டுக்குனோம்” என்று கலகலப்பாகப் பேசினார்.

தொடர்ந்து மற்றொரு தவெக அமைச்சரான அருண்ராஜ் அரசியலுக்கு வந்த சூழல் குறித்தும் புஸ்ஸி ஆனந்த் மேடையில் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார். “நீ ஐஆர்எஸ் அதிகாரியா இருக்கனால தான் உனக்கு என் பொண்ணு கொடுத்தேன்; நீ அரசியலுக்குப் போவனு தெரிஞ்சிருந்தா கொடுத்திருக்கவே மாட்டேன்” என்கிற அளவுக்கு அருண்ராஜின் நிலைமை அவரது மாமனாரால் மாறியதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டார்.

Advertisement

பொதுமேடையில் தங்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய இந்த எதார்த்தமான பேச்சைக் கேட்டு, மேடையிலிருந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகிய இருவரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தனர். தவெக அமைச்சர்களின் இந்த மேடைப் பேச்சு மற்றும் கலகலப்பான தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in