LATEST NEWS
“சோனியா காந்தி தடுத்தார்” தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காதது நல்லதுதான்… ரகசியத்தை உடைத்த அமைச்சர் ஆனந்த்..!!
தமிழக இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி குறித்தான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளன . தவெக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் என்.ஆனந்த், தேர்தலுக்கு முன்பாகக் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டது தங்களுக்கு மிகவும் நல்லதுதான் என்று ஒரு புதிய கருத்தை முன்வைத்துள்ளார் .
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தேர்தலுக்கு முன்பாகக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் இருந்ததால்தான், தமிழக மக்கள் மத்தியில் தங்களது கட்சியின் உண்மையான பலம் என்னவென்று தங்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார் . தேர்தல் களத்தில் தவெகவின் தனித்துவமான செல்வாக்கை அறிந்துகொள்ள இந்தக் களம் உதவியாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
அதேநேரம், தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா டெல்லியில் நடந்த திரைமறைவு அரசியல் நகர்வுகள் குறித்து ஒரு பரபரப்பான தகவலைப் பகிர்ந்துள்ளார் . தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி மிகவும் விரும்பினார் என்றும், ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியதன் காரணமாகவே அவர்கள் திமுக உடனான கூட்டணியைத் தொடர்ந்து நீடித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
