CRIME
ஐயோ இது என்ன கொடுமை..!” விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. தூண்இடிந்து விழுந்து துடிதுடித்த மாணவன்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பிலிகிஹள்ளி கிராமத்தில், நந்தினி பால் பண்ணை கட்டிடத்தின் தூண் ஒன்று இடிந்து விழுந்ததில் அரசு பள்ளி மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன், அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் தொடக்கப் பள்ளியில் படித்து வந்த தனுஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள இந்த அரசுப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பால் பண்ணை கட்டிடத்தின் அருகே அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் கான்கிரீட் தூண், தனுஷின் தலையில் பலமாகத் தாக்கியதில் கடுமையான காயமடைந்து, அவன் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
A schoolboy died on the spot after a pillar of a Nandini Dairy building collapsed and fell on him in Biligihalli village of Karnataka’s Tumakuru district.
The deceased, identified as Dhanush, was a student of the Government Higher Primary School in the village.
The incident… pic.twitter.com/4rVhU8dHaR— Hate Detector 🔍 (@HateDetectors) August 19, 2026
இந்த சோக சம்பவம் பிலிகிஹள்ளி கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நந்தினி பால் பண்ணை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பொறியாளர்களின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், தரமற்ற கட்டுமானப் பணிகளேதூண் இடிந்து விழுவதற்குக் காரணம் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஹந்தனகெரே காவல் நிலைய எல்லையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கூடுதல் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
