“கடவுளாய் வந்த காக்கிச் சட்டை..!” வலியால் துடித்த கர்ப்பிணி பெண்.. மதுபோதையில் கணவர்.. அடுத்த நொடியே போலீஸ் செய்த மாஸ் காரியம்.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கடவுளாய் வந்த காக்கிச் சட்டை..!” வலியால் துடித்த கர்ப்பிணி பெண்.. மதுபோதையில் கணவர்.. அடுத்த நொடியே போலீஸ் செய்த மாஸ் காரியம்.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!

Published

on

குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதே வழக்கம். ஆனால், அண்மையில் இணையத்தில் வைரலான காணொளி ஒன்றில், குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை நிறுத்திய காவல் அதிகாரி, அவரது காரின் பின்சீட்டில் கர்ப்பிணியான மனைவி இருப்பதை அறிந்து அபராதம் விதிக்காமல் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கிறார். அந்தப் பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குடிபோதையில் இருந்த நபரைப் பின்சீட்டில் அமரவைத்துவிட்டு, காவலரே காரை ஓட்டிச் சென்று அவர்களைப் பாதுகாப்பாக வழி அனுப்பி வைக்கிறார். “இப்படித்தான் காவல்துறையினர் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள்” என்ற செய்தியோடு பரவிய இந்தக் காணொளி, இணையவாசிகளிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றது.

https://www.instagram.com/reel/DSw-BqNiGMN/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இருப்பினும், இந்த வீடியோ உண்மைச் சம்பவம் அல்ல. மாறாக விழிப்புணர்விற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாவனை வீடியோ என்பது தெரியவந்துள்ளது. ஆரவ் மாவி என்பவரால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025 டிசம்பரில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, சமூக கருத்துகளை கதைகளாகக் கூறும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவைச் சிலர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் கருதிய நிலையில், இது முழுக்க முழுக்க நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோ என்பதை அதன் உருவாக்குநரே தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in