LATEST NEWS
“எமன் எதிரே வந்தபோதும் அஞ்சாத தாய்..!” அதிவேகமாக வந்த ரயில்.. குழந்தைகளை காப்பாற்ற தாய் செய்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!!
பீகாரின் ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், மூன்று பெண்கள் தங்கள் இரு குழந்தைகளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகக் அதிவேக ரயில் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. தப்பிக்க வழியில்லாத அந்த இக்கட்டான சூழலில், தாய் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் குழந்தைகளை அணைத்துத் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு கேடயம் போல மூடிப் படுத்துக்கொண்டார். ரயில் மிக அருகில் கடந்து சென்றதால் ரயிலின் பாகங்கள் மோதி அப்பெண்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோதிலும், அந்தத் தாயின் சாதுரியத்தாலும் தைரியத்தாலும் குழந்தைகள் இருவரும் எவ்வித விபத்துமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
A mother became a human shield to protect her children as a train passed just inches above them in Bihar, India.
In a moment of unimaginable courage and a mother’s instinct to protect her children, she put their lives before her own.
Miraculously, all of them survived. ❤️ pic.twitter.com/4QTNZD3z1p— Bharat Mata ke Sewak (@CountryGulshan) August 9, 2026
இந்த நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான நேரத்தில் தன் உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட்ட அந்தத் தாயின் இணையற்ற பாசத்தையும் தைரியத்தையும் இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், ரயில்வே விதிகளின்படி தண்டவாளத்தைக் கடப்பது சட்டவிரோதமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது என்பதால், இத்தகைய அலட்சியப் போக்கைப் பாராட்டி மகிமைப்படுத்தக் கூடாது என்றும், மக்கள் தங்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
