LATEST NEWS
“என் பொழப்பு போச்சே சார்..!” ரயிலில் போலீஸ் செய்த அராஜகம்… கதறி அழுத்த பாட்டி.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வீடியோ..!!
ராஞ்சியிலிருந்து லோஹர்தகா நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில், தனது ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வயதான பெண் ஒருவர் கொண்டைக்கடலை விற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அந்த ஏழைப் பெண்ணின் வாழ்வாதாரக் கூடையைப் பிடித்து தண்டவாளத்தில் வீசி எறிந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbsIPm-oRr7/?utm_source=ig_embed&ig_rid=AxC_jqoIMw6jvRSbx_FBQb6
அந்தப் பெண்ணின் ஒரு நாள் முழுமையான உழைப்பும் கண் இமைக்கும் நேரத்தில் வீணடிக்கப்பட்டதைக் கண்டு சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கேமராவில் தன் முகம் பதிவாவதைக் கண்ட அந்தத் காவலர் உடனடியாக அங்கிருந்து நழுவிச் சென்றார். இணையத்தில் வைரலான இந்தக் காணொதியைக் கண்ட நெட்டிசன்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது போன்ற இத்தகைய மனிதாபிமற்ற செயலிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்ட காவலர் மீது கடுமையான துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கொந்தளிப்புடன் கோரி வருகின்றனர்.
