CRIME
ஐயோ கடவுளே..! ஓடையில் கிடந்த 9 வயது சிறுமியின் உடல்.. சிசிடிவியில் சிக்கிய பக்கத்துக்கு வீட்டுக்காரர்.. நடந்ததுஎன்ன..? நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஒன்பது வயது நான்காம் வகுப்பு மாணவி ஒருவர்க்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் சாஹில் கைரே (25) என்பவர் நைசாக ஏமாற்றி அழைத்துச் சென்று இந்த வன்செயலில் ஈடுபட்டுள்ளார். தன் பாவம் வெளியே தெரிந்துவிடும் என்ற குற்ற உணர்ச்சியாலும் பயத்தாலும், அந்தப் பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவர் இறங்கி இருக்கிறார்.
மாலையில் சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினரும் கிராம மக்களும் தேடிய நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சாஹில் கைரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஓடைப் பகுதி மரத்தடியில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் கிராம மக்களும் உறவினர்களும் புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
