“காலைல சிரிச்சுகிட்டுப் போனான்.. ஆனா?” ஆசிரியரின் வெறிச்செயலால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“காலைல சிரிச்சுகிட்டுப் போனான்.. ஆனா?” ஆசிரியரின் வெறிச்செயலால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது சிறுவன் பிரணய் தேஜா ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற தனது மகன், ஆசிரியரின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்து வகுப்பறையிலேயே சரிந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பே அவன் இறந்துவிட்டதாகவும் சிறுவனின் தந்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

A six-year-old boy lost his life after his teacher allegedly slapped him over homework in Visakhapatnam.

The teacher slapped him, after which he suddenly collapsed and later lost his life 💔 pic.twitter.com/RhT39ITB1R— Tehxi (@yajnshri) August 20, 2026

https://www.facebook.com/reel/1627304149048485/?t=4

குழந்தையின் திடீர் மரணத்தையடுத்து மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினரும் உறவினர்களும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வருவாய் கோட்ட அதிகாரியும் காவல்துறையினரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in