மதுரையை உலுக்கிய நள்ளிரவு கொடூரம்..! கத்தி முனையில் சினிமா பாணி பெட்ரோல் பல்க்கில் கொள்ளை.. இணையத்தில் வைரலாகும் பகீர் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

மதுரையை உலுக்கிய நள்ளிரவு கொடூரம்..! கத்தி முனையில் சினிமா பாணி பெட்ரோல் பல்க்கில் கொள்ளை.. இணையத்தில் வைரலாகும் பகீர் சிசிடிவி காட்சி..!!

Published

on

மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், கத்தி முனையில் 35,000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள், அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த துரித நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

கத்தி முனையில் ரூ.35 ஆயிரம் பறித்தவர்கள் கைது – பணம், பட்டாக்கத்தி பறிமுதல்

மதுரை – சோழவந்தான் அருகே பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் ரூ.35 ஆயிரம் பறித்த 3 பேர் கும்பலில்,

சிசிடிவி ஆதாரத்தில் 6 மணி நேரத்தில் 2 பேரை கைது செய்தனர் நாகமலை போலீசார்.

கைதானவர்கள் – முத்து இளங்கோவன்… pic.twitter.com/bsdseVBuxO— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) August 18, 2026

கைது செய்யப்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த முத்து இளங்கோவன் (22) மற்றும் மகாலின்கம் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் மிரட்டுவதற்குப் பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய மூன்றாவது நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in